Social Icons

Pages

Sunday, 20 October 2013

Horror In Nagarcovil news below:

நாகர்கோவிலில் 10 மாதங்களுக்கு முன்பு இறந்து போன பெண்ணின் சடலத்தை இன்று வீட்டிலேயே பிரேத பரிசோதனை செய்தனர். சடலத்துடன் 10 மாதமாக வசித்த அந்த பெண்ணின் தாய், சகோதரர் மற்றும் மகன் மூவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நாகர்கோவில் ராமவர்மா புரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணிய பிள்ளை. ஓய்வு பெற்ற கல்லூரி ஊழியர். இவர் இறந்து விட்டார். இவரது மனைவி சரோஜினி (89). இவர்களுக்கு உமாதேவி (56) என்ற மகளும், பெருமாள், செல்வம் பிள்ளை (53) என்ற மகன்களும் உண்டு. உமாதேவியின் கணவர் தாணுப்பிள்ளை. குடும்ப தகராறு காரணமாக மகன் சிவராமனுடன், ராமவர்மா புரத்தில் உள்ள தாய் வீட்டில் உமாதேவி வசித்தார். பெருமாளும் திடீரென இறந்து போக, வீட்டில் சரோஜினி, செல்வம் பிள்ளை, உமாதேவி, அவரது மகன் சிவராமன் ஆகியோர் மட்டுமே வசித்து வந்தனர். இவர்கள் அக்கம் பக்கத்தில் யாருடனும் பேசுவதில்லை. வீடு எப்போதும் பூட்டியே கிடக்கும். இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 3ம் தேதி, உடல்நிலை சரியில்லாமல் உமாதேவி இறந்திருக்கிறார். ஆனால் அவரது உடலை வீட்டில் இருந்தவர்கள் துணியில் கட்டி ஒரு அறைக்குள் பூட்டிவிட்டனர். இறந்து போன சுப்பிரமணிய பிள்ளையின் பென்ஷன் பணம் மட்டுமே இவர்களின் குடும்ப வருமானமாக இருந்தது. சமீபத்தில் பென்ஷனுக்கான உயிர் வாழ் சான்றிதழை இவர்கள் சமர்ப்பிக்காததால், பென்ஷனும் நின்று போனது. இதனால் வீட்டுக்கு அருகே வசிக்கும் சாந்தி என்பவரிடம் பணம் கேட்டுள்ளனர். சாந்தியின் மகன் ரூ.500 கொடுத்துள்ளார். அந்த பணத்தில் ஓட்டலில் செல்வம் பிள்ளை சாப்பாடு வாங்கி வந்தார். அவர்கள் சாப்பிட்டு கொண்டிருந்த போது, பாத்திரத்தில் சாந்தி தண்ணீர் கொண்டு சென்றார். அப்போது வீட்டில் துர்நாற்றம் வந்ததை சாந்தி அறிந்து வெளியில் பதற்றத்துடன் வந்து விட்டார். இதுகுறித்து போலீசில் அவர் தகவல் அளித்தார். உடனே டவுன் டிஎஸ்பி உதயகுமார் தலைமையில் கோட்டாறு இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து வீட்டில் சோதனை செய்தனர். அங்கு 10 மாதங்களுக்கு முன்பு இறந்து போன உமாதேவியின் சடலத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் இருந்த 3 பேரும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் போல் இருந்ததால், உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோட்டாறு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் பிரேத பரிசோதனை நடத்த டாக்டர்களை அனுப்பி வைக்குமாறு, மருத்துவ கல்லூரி முதல்வரிடம் இன்று காலை கடிதம் அளித்தனர். அதன்படி டாக்டர்கள் வந்து பிரேத பரிசோதனை நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சடலம் இருந்தால் கருப்பு உருவம் வராது? வீட்டில் இருந்தவர்களிடம் போலீசார் விவரம் கேட்ட போது யாரும் பேசவில்லை. நீண்ட நேரத்துக்கு பிறகு செல்வம் பிள்ளை மட்டும், எனது தந்தை ஏதோ உருவத்தை பார்த்து இறந்து போனார். எனது சகோதரர் பெருமாள், எனது சகோதரி உமாதேவியும் அந்த உருவத்தை பார்த்து இறந்து போனார்கள். நானும் அந்த உருவத்தை பார்த்தேன். ஆனால் சாகவில்லை. சடலம் இருந்தால் உருவம் வராது என்றார். மற்றப்படி அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. செல்வம் பிள்ளை பி.டெக் முடித்துள்ளார். ஆங்கிலத்தில் சரளமாக பேசுகிறார். - See more at: http://www.tamilspace.com/2013/10/10-months-after-girl-body.html#sthash.U2xwV4TN.dpuf
AArambam movie new news about Arya and tapsi:

‘ஆரம்பம்’ படத்தில் ஆர்யாவும், டாப்ஸியும் அதிக நெருக்கம் காட்டியிருப்பதாக 

அம்பலப்படுத்தியிருக்கிறார் நடிகர் அஜித். ‘பிக்கப் – ட்ராப்’ இந்த இரண்டு சமாச்சாரங்களிலும் இளம் 

ஹீரோக்கள் மத்தியில் பெயர் போனவர் நடிகர் ஆர்யா. இந்த மாதிரியான விஷயங்களில் மத்த 

ஹீரோக்கள் எல்லாம் ஏங்கிக்கிடக்க  ஆர்யாவுக்கு மட்டும் தாரளாமாய் கிடைக்கிறதாம். அதனால் தான் 

என்னவோ அவரை பற்றி பேச வாயெடுத்தாலே மத்த ஹீரோக்கள் அவரை பொது மேடைகளில் காய்ச்சி 

எடுத்து விடுகிறார்கள். இதில் இப்போது அஜித்தும் சேர்ந்திருக்கிறார். அவரும் தன் பங்குக்கு ஆர்யாவின் 

ரொமான்ஸ் சீன்கள் ரகசியத்தை இப்போது அம்பலப்படுத்தியிருக்கிறார். ‘வீரம்’ படத்தின் 

படப்பிடிப்புக்காக அஜித் வருகிற 20 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 5 ஆம் தேதி வரை ஹைதராபாத் 

செல்ல இருக்கிறார். அதனால் நேற்று சென்சார் ஆன ஆரம்பம் படம் அவருக்கு ஸ்பெஷலாக 

போட்டுக்காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த அவர் டைரக்டர் விஷ்ணுவர்தனை வியந்து பாராட்டினாராம். 

அதுமட்டுமில்லாமல் அதே படத்தில் நடித்திருக்கும் ஆர்யாவுக்கும் போனைப் போட்டு  படத்துல உங்க 

நடிப்பு பிரமாதமா இருக்கு. நான் நான் ரொம்ப ரசிச்சேன். குறிப்பா டாப்சியோட நீங்க பண்ற ரொமான்ஸ் 

சீன்கள் எல்லாமே ரொம்ப ரொம்ப இளமையா இருக்கு என்றாராம். பதிலுக்கு ஆர்யாவுக்கு உங்க படத்துல 

இதே மாதிரி இன்னொரு சான்ஸ் கெடைச்ச கண்டிப்பா நடிப்பேன் என்றாராம். - See more at: 

Friday, 18 October 2013

Monkey like a man!!!



மார்மோப்ஸட் இனத்தைச் சார்ந்த குரங்குகள் மனிதர்களைப்போல உரையாடிக்கொள்வதாக 

ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.  'உலகிலேயே மிகச் சிறிய குரங்கினமான மார்மோப்ஸட்கள் 8 

அங்குல நீளம் கொண்டவை. 30 நிமிடங்கள் வரை தொடர்ந்து ஒன்றுக்கொன்று 

உரையாடிக்கொள்கின்றன' என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பிரின்ஸ்டன் 

பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆசிஃப் காஸன்ஃபார் கூறியது: "இவற்றின் உரையாடல்கள் பறவை, 

தவளை போன்ற மற்ற விலங்கினங்கள் எழுப்பும் குரலோசையில் இருந்து வேறுபட்டு மனித 

உரையாடல்களுடன் ஒத்துள்ளன. இதன்காரணமாகவே மார்மோப்ஸட் குரங்குகள் சிம்பன்ஸி மனிதக் 

குரங்குகள் போன்ற மற்ற குரங்கினங்களிலிருந்து வேறுபட்டு தனித்தன்மையுடன் உள்ளன. 

ஒன்றுக்கொன்று நட்புடன் பழகுவது, தகவல் தொடர்புகளுக்கு உரையாடல் சப்தங்களை எழுப்புவது 

ஆகியவற்றில் மனிதர்களுடன் ஒத்துள்ளன' என்றார்.
சூர்யா-ன் புதிய படத்தின் தகவல்கள் :


லிங்குசாமி,சூர்யா,சமந்தா ஆகியவர்களின் புதிய கூட்டணியில் வரவிருக்கும்

பெயரிடபடாத படத்தை குறித்து மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகி

உள்ளன. இந்த படம் 3D தொழில்நுட்பத்தில் வெளிவரபோவதாகவும் சில

தகவல்கள் வெளிவந்தது. தற்போது மேலும் சுவாரசியமான தகவல்கள்

வெளியாகி உள்ளன.DRAGON CAMARA digital என்னும் புதிய தொழில் நுட்ப

CAMARA பயன்படுத்தபட்டுள்ளது.

மேலும் இது ஒரு புதிய முயற்சியாக இருக்கும் என இந்த

படத்தின் cinematographer தெரிவித்து உள்ளார். இந்த படம் ஒரு புதிய

முயற்சியாக அமையும் என இயக்குனர் லிங்குசாமி தெரிவித்து உள்ளார் .

படத்தின் சோதனை படங்கள் (test shoot) சென்னை-இல் நடைபெற்றது . 

photo's:












சிம்புவுக்கு அக்கவாக கனவுகன்னி:

ஒரு காலத்தில் கனவுக்கன்னியாக ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்தவர் தொடையழகி ரம்பா. பின்னர் தொழிலதிபர் ஒருவரை மணந்து வெளிநாட்டில் செட்டில் ஆனார்.
தற்போது இரண்டரை வயதில் குழந்தை உள்ளது ரம்பாவிற்கு. இந்நிலையில் தனது அடுத்த இன்னிங்ஸ்க்கு ரெடியாகி விட்டாராம் ரம்பா. சிம்புவின் அக்காவாக தமிழ் எண்ட்ரி கொடுக்க இருக்கிறாராம். இனி, அக்கா, அண்ணி போன்ற நல்லா கதாபாத்திரங்கள் மட்டுமே இவரது பெஸ்ட் சாய்ஸாக இருக்குமாம்.
தமிழ் போலவே தெலுங்கிலும் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளாராம் ரம்பா. கணவரைப் பிரிந்ததே ரம்பாவின் திரைஉலக மறு பிரவேசத்திற்கு காரணம் என சொல்லப் படுகிறது.







தெலுங்கில் அஜித்தின் ஆட்டம் ஆரம்பம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
தெலுங்கில் அஜித் படங்களுக்கென்று ஒரு மிகப்பெரிய ரசிகர்கூட்டமே இருக்கிறது.
அஜித் நடித்த பில்லா, மங்காத்தா இரண்டுமே அங்கே சூப்பர்டூப்பர் ஹிட். அதனால் இப்போது அவர் நடித்துவரும் ஆரம்பம் படத்திற்கும் எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது.
மேலும் ஆந்திரா ரசிகர்களின் கனவுக்கன்னியான நயன்தாராவும் கனவுக்கன்னியாக முயற்சித்துவரும் டாப்ஸியும் இந்தப்படத்தில் இருப்பதால் படம் தெலுங்கிலும் பட்டையை கிளப்பும் என்பதில் சந்தேகமில்லை.
தெலுங்கில் இந்தப்படத்திற்கு ஆட்டம் ஆரம்பம் என பெயர் வைத்திருக்கிறார்கள்.
முதலில் தமிழில் கூட ஆட்டம் ஆரம்பம் என பெயர் வைப்பதாகத்தான் இருந்தது.
அனேகமாக அக்டோபர் முதல் வாரத்தில் தெலுங்கில் ஆட்டம் ஆரம்பம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யுவனின் இசைக்கென்றே ஒரு ரசிகர்கூட்டமும் ஆந்திராவில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜில்லா படத்தின் பாடல் காட்சிகள் மேலும் பல வெளிநாட்டு இடங்களில் படம் எடுக்க பட்டு வருகின்றது. படம் கூடிய சீக்கிறத்தில் வெளிஇடப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பினை பெற்றுள்ளது.





அஜித்தின் ஆரம்பம் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கை குழு.
ரசிகர்களின் அமோக எதிர்பார்ப்புடன் ’தல’ அஜித், இயக்குனர் விஷ்ணுவர்த்தன் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் ஆரம்பம்.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து ஆர்யா, நயன்தாரா, டாப்சி மற்றும் ராணா என நட்சத்திர பட்டாளமே கலக்கியுள்ளனர்.
கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடந்து வந்த இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் முடிந்துவிட்டது.
இதனைத் தொடர்ந்து சென்சாருக்கு சென்ற ஆரம்பம் படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
இதற்கு முன்னர் வெளியான பில்லா, மங்காத்தா,அசல் போன்ற படங்களுக்கு யு சான்றிதழ் கிடைக்கவில்லை,
இப்படத்திற்கு இச்சான்றிதழ் கிடைத்துள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.


சினிமாவில் மேலும் ஒரு ஹிட் படத்தை தவறவிட்டுள்ளாராம் நடிகர் அஜித்.
சினிமா பின்னணி இல்லாமல் முன்னணி நடிகராக உயர்ந்தவர் அஜித்.
காதல் படங்களில் நடித்த வந்தவருக்கு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த தீனா படம் திருப்பு முனையாக அமைந்தது.
தற்போது ரசிகர்களின் மத்தியில் தல என்ற பெயரோடு தலைகணம் இல்லாமல் வலம் வருகிறார்.
கஜினி காக்க காக்க மற்றும் ந ந்தா போன்ற படங்களில் இவர் நடிப்பதாக இருந்தது ஆனால் சில காரணங்களால் சூர்யா நடித்தார்.
அதே போல் நான் கடவுள் படத்திலும் அஜித்துக்குப் பதிலாக ஆர்யா நடித்தார்.
இப்படி அஜித் நடிக்க இருந்து மாற்று நடிகர்கள் நடித்த படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று அப்படத்தின் நாயகர்களை உச்சத்திற்கும் கொண்டு சென்றது.
இதேபோல் தற்போது அஜித் நடிக்க இருந்த படம் வேறு நடிகர் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
அந்தப்படம்தான் கோ. ஒளிப்பதிவாளராக இருந்த கே.வி. ஆனந்த் இயக்கிய படம்.
அவர் இந்த கதையை அஜீத்துக்காக உருவாக்கினாராம். அதன்பின் சூர்யாவிடம் சென்றதாம். அதன்பின் சிம்புவிடம் கைமாறி கடைசியாக ஜீவா நடித்தாராம்.
விஜய்-ன் ஜில்லா படத்தின் பாடல் காட்சி  புதிய திருப்பங்கள்: 
சென்னை: ஜில்லா படக்குழுவினர் பாடல் காட்சியை படமாக்க பல்கேரியா செல்வதாக இருந்தது. விஜய், காஜல் அகர்வால் நடித்து வரும் ஜில்லா படத்தின் படப்பிடிப்பு ஜரூராக நடந்து வருகிறது. படத்தின் டூயட் பாடல் காட்சியை படமாக்க படக்குழுவினர் அடுத்த மாதம் பல்கேரியா செல்கின்றனர் என்று கூறப்பட்டது. ஆனால் படக்குழுவினர் பல்கேரியாவுக்கு பதில் ஜப்பான் செல்கிறார்களாம். இது குறித்து இயக்குனர் நேசன் கூறுகையில், நாங்கள் பல்கேரியா செல்ல திட்டமிட்டிருந்தோம். ஆனால் அங்குள்ள கிளைமேட் படப்பிடிப்புக்கு ஏற்றவாறு இல்லை. அதனால் நாங்கள் ஜப்பான் செல்கிறோம். அங்கு ஒசாகா மற்றும் சில இடங்களில் டூயட் பாடலை படமாக்குகிறோம். இந்த மாத இறுதியில் ஜப்பானில் படப்பிடிப்பு துவங்கும் என்றார்.


ஆல் இன் ஆல் அழகுராஜா’ பட ட்ரைலரில் அரசின் குட்கா எதிர்ப்பு விளம்பரப் படத்தைக் கிண்டலடிப்பது போல பேசியிருப்பதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார் சந்தானம்.
ஹாட்ரிக் வெற்றியாளர் ராஜேஷின் இயக்கத்தில் கார்த்தி, காஜல் அகர்வால், பிரபு, சந்தானம் என வெற்றிகூட்டணியோடு தீபாவளி சரவெடியில் வெடிக்கவிருக்கும் திரைப்படம் ஆல் இன் ஆல் அழகுராஜா.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது.
அதில், குட்காவுக்கு எதிரான விளம்பரத்தை சந்தானம் நக்கலடித்துள்ளதாக புகையிலை கட்டுப்பாட்டு கூட்டணி புகார் அளித்துள்ளது.
அவர்கள் அளித்துள்ள புகாரில், விளம்பரத்தில் தம்மடிக்க வேண்டும் என கார்த்தி கேட்க, அதற்கு சந்தானம் குட்கா விளம்பரத்தில் வரும் முகேஷின் குரலை இமிடேட் பண்ணி பேசிக் காட்டுவார்.
பின்னர் கார்த்தி சிகரெட் வேண்டாம் என சொல்வது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இது அந்த விளம்பரத்தைக் கிண்டலடிப்பது போலுள்ளதாக தமிழ்நாடு புகையிலைக் கட்டுப்பாட்டுக் கூட்டணி தெரிவித்துள்ளது.
மேலும் சந்தானத்துக்கு எதிராக எழுத்துப்பூர்வ மனுவையும் அளித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் அமைப்பாளர் எஸ் சிரில் அலெக்சாண்டர் கூறுகையில், புகையிலை மற்றும் குட்கா போன்ற போதைப் பொருட்களுக்கு எதிரான மிக வெற்றிகரமான விளம்பரத்தை சந்தானம் கிண்டலடித்துள்ளார்.
குட்காவுக்கு எதிரான விளம்பரத்தில் வரும் முகேஷ் நிஜமாகவே புகையிலையால் பாதிக்கப்பட்டு இறந்தவர். அவரது குரலை இமிடேட் செய்வது சரியா? புகையிலை மற்றும் புகைப் பழக்கத்தை விட்டொழிப்பது கேவலமான செயல் என்பதைப் போல சந்தானத்தின் கிண்டல் அமைந்துள்ளது.
இந்த காட்சி நிச்சயம் நீக்கப்பட வேண்டும். புகைப்பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளோரை சந்தானத்தின் இந்த கிண்டல் பாதித்துள்ளது என்றும் இது புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டம் பிரிவு 5-க்கு எதிரானதும் எனவும் கூறியுள்ளார்.
video in here:




ஆரம்பம் படத்தினை வெளியிடுவதற்கு சென்டிமெண்ட் ஒன்றை வைத்திருக்கிறார்களாம் படக்குழுவினர். ஆரம்பம் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்ற நிலையில் படத்தை தீபாவளி தினமான நவம்பர் 2ம் திகதி வெளியிட தீர்மானித்திருந்தார்கள். அதன்பிறகு பட வெளியீட்டு திகதியை இரண்டு நாட்கள் முன்னதாகவே அதாவது அக்டோபர் 31ம் திகதிக்கு மாற்றிவைத்து விட்டார்கள். தீபாவளி தினத்தன்று ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காமல் அடித்துப்பிடித்து சண்டையிடக் கூடாது என்பதால் முன்கூட்டியே வெளியிடுகிறார்கள் என்று நினைத்தால் இங்கு கதையே வேறு. இதற்கு பின்னாடி ஒரு செண்டிமெண்ட்டே ஒளிந்திருக்கிறதாம். இதற்குமுன் ஆரம்பம் படத்தில் நடிக்க அஜித் ஒப்புக்கொண்டது, படத்திற்கு பூஜை போடப்பட்டது, படத்தின் டைட்டிலை அறிவித்தது, முதல் டீஸரை வெளியிட்டது, அடுத்து ஓடியோ வெளியீடு, ட்ரெய்லர் என எல்லாமே வெளியிடப்பட்டது வியாழக்கிழமை அன்றுதான். அதனால் செண்டிமெண்ட்டாக படத்தையும் வியாழக்கிழமை வெளியீடு செய்தால் நன்றாக இருக்கும் என்பதால் முன்கூட்டியே வெளியிடுகிறார்களாம். - See more at: http://www.tamilspace.com/2013/10/Arrambam-Action-Release.html#sthash.iC4a5fmr.dpuf

பாண்டிராஜ் இயக்கிய மெரினா படத்தில் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். மெரினா படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து ´மனம் கொத்திப் பறவை´, ´எதிர்நீச்சல்´, ´கேடிபில்லா கில்லாடி ரங்கா´, ´வருத்தப்படாத வாலிபர் சங்கம்´ என வரிசையாக நடித்தார். ´3´ படத்தில் நடித்தபோது தனுஷும், சிவகார்த்திகேயனும் நண்பர்கள் ஆனார்கள். அந்த சமயத்தில் உருவான நட்பு இப்போதும் பெரிதாகப் பேசப்படுகிறது. ´என் தம்பி சிவகார்த்திகேயன்´ என்று தனுஷ் பெருமையாக சொல்லிக்கொண்டிருக்கிறார். அதனாலேயே தன் தயாரிப்பில் உருவான ´எதிர்நீச்சல்´ படத்துக்கு சிவகார்த்திகேயனை ஹீரோவாக்கினார். அந்தப் படத்துக்காக குறிப்பிட்ட சம்பளம் வாங்கிய சிவகார்த்திகேயன், ´கேடி பில்லா கில்லாடி ரங்கா´ படத்தில் நடித்ததற்காக கோடி ரூபாய் சம்பளத்தைத் தொட்டாராம். ´வருத்தப்படாத வாலிபர் சங்கம்´ படத்துக்காக ரெண்டு கோடி சம்பளம் வாங்கினாராம். படத்தின் வெற்றி சிவகார்த்திகேயனின் மார்க்கெட் வேல்யூவை இன்னும் அதிகரித்துவிட்டது. 7 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூலைத் தொட்டதால், தற்போது தன் சம்பளத்தை 5 கோடியாக உயர்த்திவிட்டாராம் சிவகார்த்திகேயன். இந்த சமயத்தில், சிவகார்த்திகேயனிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். சிவகார்த்திகேயன் 4 கோடி கேட்க, உதயநிதி அவ்வளவு தர முடியாது என மறுக்க... பேச்சுவார்த்தை இழுத்துக்கொண்டே போனதாம். இறுதியில் இரண்டை கோடிக்கு உதயநிதி ஓ.கே. சொல்ல, சிவாகார்த்திகேயனோ ´நோ´ சொல்லிவிட்டாராம். - See more at: http://www.tamilspace.com/2013/10/no-SivaKarthikeyan.html#sthash.ZGOMA0wG.dpuf

வானியல் நிகழ்வுகளில் ஒன்றான புறநிழல் சந்திர கிரகணம் நாளை அதிகாலை நிகழவுள்ளது. இதனை பொதுமக்கள் காண பிர்லா கோளரங்கில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

வானில் நிகழும் அரிய நிகழ்வுகளில் ஒன்றான சந்திர கிரகணம் நாளை நிகழவுள்ளது. சந்திர கிரகணங்களில் இந்த நிகழ்வானது புறநிழல் சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.

பெரும்பாலும் இந்த நிகழ்வின் போது ஒளி குறைந்த நிழல் மட்டுமே சந்திரன் மீது விழுவதால் பூமியின் பெரும்பாலான பகுதிகளி்ல் தெரிய வாய்ப்பு இல்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இருந்தாலும், இந்த நிகழ்வானது அதிகாலை 3.20 முதல் காலை 7.20 வரை நீடிக்கும், இதில் 5.20 மணிக்கு கிரகணம் உச்சகட்டத்தை எட்டிவிடும், இருந்தாலும் அந்த நேரத்தில் சூரிய ஒளி பரவ ஆரம்பித்து விடுவதால் அதனை காணும் வாய்ப்புகள் இல்லை என்று பிர்லா கோளரங்க இணை இயக்குநர் செளந்தர ராஜபெருமாள் தெரிவித்துள்ளார்.
நீதி அமைச்சருடன் கே .எம்.பிர்லா சந்திப்பு  

நிலக்கரி ஒதுக்கீடு முறைகேட்டில் தொடர்புடைய தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லா மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை டெல்லியில் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அப்போது அவர் மீது சி.பி.ஐ. பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை குறித்து விவாதித்ததாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து வருவாய்துறை செயலாளரையும் பிர்லா சந்தித்தார்.

இதுதொடர்பாக பேசிய அவர், தான் தவறு செய்யவில்லை என்றும் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்து கவலைப்படவில்லை என்றும் கூறினார்.

சி.பி.ஐ. வழக்குபதிவு செய்த ஒரிரு நாட்களிலேயே இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஒடிசா மாநிலம் தலபிராவில் உள்ள 2 நிலக்கரி சுரங்கங்கள், ஆதித்தியா பிர்லா குரூப்பைச் சேர்ந்த ஹிண்டால் நிறுவனத்திற்கு முறைகேடாக ஒதுக்கப்பட்டதாக பிர்லா மீது சிபிஐ வழக்குபதிவு செய்துள்ளது.

கோச்சடையான்  கதை வெளியானது ...
மிகப்பெரிய பரபரப்பைக் கிளப்பி வரும் கோச்சடையான் கதை தற்போது வெளிவந்துள்ளது.
சவுந்தர்யா தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் கோச்சடையான்.
தந்தை ரஜினிகாந்த் ஒரு நாட்டை திறம்பட நல்லமுறையில் ஆண்டு வருகிறார். நாட்டின் செல்வங்களை மக்களுக்குப் பகிர்ந்தளிக்கிறார்.
ஆனால், நல்ல ஆட்சியை நடக்கவிடாமல் அவரது அமைச்சரவையில் இருக்கும் சிலர் அவருக்கு எதிராக சதி செய்கின்றனர். அசிங்கமான உத்திகளைக் கையாண்டு தந்தை ரஜினியின் ஆட்சியைக் கவிழ்த்து விடுகிறார்கள்.
அப்போதுதான் மகன் ரஜினிகாந்த் பிறக்கிறார். திறமையான தந்தையின் பயிற்சியில் திறமைசாலியாக வளர்கிறார் மகன் ரஜினிகாந்த். பிறகு காட்டில் மறைவாக தனிக்குழு ஒன்றை அமைக்கிறார்.
தந்தையின் ஆட்சியைக் கவிழ்த்த துரோகிகளின் கையிலிருக்கும் நாட்டைப் புரட்சி செய்து வெல்கிறார். இதுதான் கதையின் மையக்கருவாம்.
மிகப்பெரிய சுறா மீனுடன் ரஜினி சண்டையிடும் காட்சி, ஹாலிவுட்டின் அவதார் மற்றும் டின் டின்னிற்கு நிகராக படமாக்கப்பட்டுள்ளதாம்.

நான் பேட்மின்டனின் தீவிர ரசிகை என்கிறார் நடிகை டாப்ஸி.
பெரும்பாலான நடிகர், நடிகைகள் கிரிக்கெட் ரசிகர்களாக இருப்பார்கள்.
இதில் காஜல், திவ்யா ஆகிய இருவரும் பிரபல வீரர்கள் பங்கேற்கும் டென்னிஸ் விளையாட்டை ரசிப்பதற்காக சமீபத்தில் லண்டன் சென்று திரும்பினர்.
ஆனால் இவர்களில் சற்று வித்தியாசமானவர் டாப்ஸி.
இவர் பேட்மின்டனின் தீவிர ரசிகையாம்.
சென்ற வாரம் ஐதராபாத்தில் வீராங்கனை சாய்னா தலைமையில் பேட்மின்டன் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியினை நேரில் கண்டு ரசித்ததுடன் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டாராம் டாப்ஸி.
பாடல் காட்சிகளில் நான் நடிக்கவில்லை என்று சொன்ன நஸ்ரியா மீடியா நண்பர்களோடு அமர்ந்து படம் பார்த்து இது நானில்லை டூப் என்று சொல்ல தயாரா? என சற்குணம் கேள்வி எழுப்பியுள்ளார்.
வாகை சூடவா புகழ் சற்குணம் இயக்கத்தில் தனுஷ், நஸ்ரியா ஜோடியாக நடித்து வரும் திரைப்படம் நய்யாண்டி.
இப்படம் வருகின்ற 11ம் திகதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் என்னுடைய தொப்புளுக்கு டூப் போட்டுள்ளார் என்று இயக்குனர் சற்குணம் மீது நஸ்ரியா புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சற்குணம் கூறுகையில், நய்யாண்டி திரைப்பட நாயகி நஸ்ரியா பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு அளித்து வரும் பேட்டிகளில், நய்யாண்டி படத்தில் வரும் ‘இனிக்க இனிக்க’ பாடல் காட்சியில் நஸ்ரியாவிற்கு பதில் வேறு பெண்ணை வைத்து முழுப்பாடலையும் எடுத்திருப்பதாகவும், டிரைலரில் ஒரு க்ளோஷ் அப் ஷாட்டில் டூப்பை பயன்படுத்தி இருப்பதாகவும் கூறியுள்ளதை நீங்கள் அறிவீர்கள்.
நான் ஏற்கனவே களவாணி, வாகை சூடவா ஆகிய நல்ல தரமான படங்களை இயக்கி தேசிய விருது பெற்றுள்ளேன் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
இனிக்க இனிக்க பாடலில் ஒரு இடத்தில் கூட நான் டூப்பை பயன்படுத்தவில்லை. அதில் நடித்திருப்பது நஸ்ரியாவை தவிர வேறு யாரும் இல்லை.
படத்தை எடிட்டிங் பண்ணும்போது ஒரு காட்சியில் அக்காட்சியின் CONTENT பார்வையாளர்களை சென்றடைய ஒரு க்ளோஸ் அப் ஷாட் அவசியப்பட்டது.
நஸ்ரியாவிடம் நான் ஒரு க்ளோஸ் அப் மட்டும் வந்து நடித்துக்கொடுத்துவிட்டு போ என்று சொன்னேன்.
இதற்காக நான் கேரளாவில் இருந்து வர முடியாது வேறு யாரையாவது வைத்து எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்ன நஸ்ரியாவிற்கு இப்போது என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. ஒரு வேளை தன்னுடைய பப்ளிசிட்டிக்காக கூட செய்திருக்கலாம்.
ஒரு வேளை நஸ்ரியாவிற்கு டிரைலரில் வரும் அந்த ஒரு க்ளோஸ் அப் ஷாட் உறுத்தலாக இருந்தால் அதை நான் நீக்கவும் தயார். ஆனால் இனிக்க இனிக்க பாடல் காட்சியில் நான் நடிக்கவில்லை என்று சொன்ன நஸ்ரியா மீடியா நண்பர்களோடு அமர்ந்து படம் பார்த்து நானில்லை டூப் என்று சொல்ல தயாரா?
இந்த படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்திருக்கிறது என்பதை இந்த நேரத்தில் உங்களுக்கு தெரியப்படுத்தி கொள்ள விரும்புகிறேன்.
மேலும் இது குடும்பத்துடன் அமர்ந்து பார்க்க கூடிய பொழுபோக்கான குடும்ப படம் என்றும் கூறியுள்ளார்.
Get some Oxigon!!!

Welcome

Welcomes you all to get O2
 

Sample text

Sample Text

Sample Text