வானியல் நிகழ்வுகளில் ஒன்றான புறநிழல் சந்திர கிரகணம் நாளை அதிகாலை நிகழவுள்ளது. இதனை பொதுமக்கள் காண பிர்லா கோளரங்கில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
வானில் நிகழும் அரிய நிகழ்வுகளில் ஒன்றான சந்திர கிரகணம் நாளை நிகழவுள்ளது. சந்திர கிரகணங்களில் இந்த நிகழ்வானது புறநிழல் சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
பெரும்பாலும் இந்த நிகழ்வின் போது ஒளி குறைந்த நிழல் மட்டுமே சந்திரன் மீது விழுவதால் பூமியின் பெரும்பாலான பகுதிகளி்ல் தெரிய வாய்ப்பு இல்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இருந்தாலும், இந்த நிகழ்வானது அதிகாலை 3.20 முதல் காலை 7.20 வரை நீடிக்கும், இதில் 5.20 மணிக்கு கிரகணம் உச்சகட்டத்தை எட்டிவிடும், இருந்தாலும் அந்த நேரத்தில் சூரிய ஒளி பரவ ஆரம்பித்து விடுவதால் அதனை காணும் வாய்ப்புகள் இல்லை என்று பிர்லா கோளரங்க இணை இயக்குநர் செளந்தர ராஜபெருமாள் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment