Social Icons

Pages

Friday, 18 October 2013


பாண்டிராஜ் இயக்கிய மெரினா படத்தில் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். மெரினா படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து ´மனம் கொத்திப் பறவை´, ´எதிர்நீச்சல்´, ´கேடிபில்லா கில்லாடி ரங்கா´, ´வருத்தப்படாத வாலிபர் சங்கம்´ என வரிசையாக நடித்தார். ´3´ படத்தில் நடித்தபோது தனுஷும், சிவகார்த்திகேயனும் நண்பர்கள் ஆனார்கள். அந்த சமயத்தில் உருவான நட்பு இப்போதும் பெரிதாகப் பேசப்படுகிறது. ´என் தம்பி சிவகார்த்திகேயன்´ என்று தனுஷ் பெருமையாக சொல்லிக்கொண்டிருக்கிறார். அதனாலேயே தன் தயாரிப்பில் உருவான ´எதிர்நீச்சல்´ படத்துக்கு சிவகார்த்திகேயனை ஹீரோவாக்கினார். அந்தப் படத்துக்காக குறிப்பிட்ட சம்பளம் வாங்கிய சிவகார்த்திகேயன், ´கேடி பில்லா கில்லாடி ரங்கா´ படத்தில் நடித்ததற்காக கோடி ரூபாய் சம்பளத்தைத் தொட்டாராம். ´வருத்தப்படாத வாலிபர் சங்கம்´ படத்துக்காக ரெண்டு கோடி சம்பளம் வாங்கினாராம். படத்தின் வெற்றி சிவகார்த்திகேயனின் மார்க்கெட் வேல்யூவை இன்னும் அதிகரித்துவிட்டது. 7 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூலைத் தொட்டதால், தற்போது தன் சம்பளத்தை 5 கோடியாக உயர்த்திவிட்டாராம் சிவகார்த்திகேயன். இந்த சமயத்தில், சிவகார்த்திகேயனிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். சிவகார்த்திகேயன் 4 கோடி கேட்க, உதயநிதி அவ்வளவு தர முடியாது என மறுக்க... பேச்சுவார்த்தை இழுத்துக்கொண்டே போனதாம். இறுதியில் இரண்டை கோடிக்கு உதயநிதி ஓ.கே. சொல்ல, சிவாகார்த்திகேயனோ ´நோ´ சொல்லிவிட்டாராம். - See more at: http://www.tamilspace.com/2013/10/no-SivaKarthikeyan.html#sthash.ZGOMA0wG.dpuf

No comments:

Post a Comment

 

Sample text

Sample Text

Sample Text