நீதி அமைச்சருடன் கே .எம்.பிர்லா சந்திப்பு
நிலக்கரி ஒதுக்கீடு முறைகேட்டில் தொடர்புடைய தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லா மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை டெல்லியில் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அப்போது அவர் மீது சி.பி.ஐ. பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை குறித்து விவாதித்ததாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து வருவாய்துறை செயலாளரையும் பிர்லா சந்தித்தார்.
இதுதொடர்பாக பேசிய அவர், தான் தவறு செய்யவில்லை என்றும் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்து கவலைப்படவில்லை என்றும் கூறினார்.
சி.பி.ஐ. வழக்குபதிவு செய்த ஒரிரு நாட்களிலேயே இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஒடிசா மாநிலம் தலபிராவில் உள்ள 2 நிலக்கரி சுரங்கங்கள், ஆதித்தியா பிர்லா குரூப்பைச் சேர்ந்த ஹிண்டால் நிறுவனத்திற்கு முறைகேடாக ஒதுக்கப்பட்டதாக பிர்லா மீது சிபிஐ வழக்குபதிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment