Social Icons

Pages

Friday, 18 October 2013


கோச்சடையான்  கதை வெளியானது ...
மிகப்பெரிய பரபரப்பைக் கிளப்பி வரும் கோச்சடையான் கதை தற்போது வெளிவந்துள்ளது.
சவுந்தர்யா தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் கோச்சடையான்.
தந்தை ரஜினிகாந்த் ஒரு நாட்டை திறம்பட நல்லமுறையில் ஆண்டு வருகிறார். நாட்டின் செல்வங்களை மக்களுக்குப் பகிர்ந்தளிக்கிறார்.
ஆனால், நல்ல ஆட்சியை நடக்கவிடாமல் அவரது அமைச்சரவையில் இருக்கும் சிலர் அவருக்கு எதிராக சதி செய்கின்றனர். அசிங்கமான உத்திகளைக் கையாண்டு தந்தை ரஜினியின் ஆட்சியைக் கவிழ்த்து விடுகிறார்கள்.
அப்போதுதான் மகன் ரஜினிகாந்த் பிறக்கிறார். திறமையான தந்தையின் பயிற்சியில் திறமைசாலியாக வளர்கிறார் மகன் ரஜினிகாந்த். பிறகு காட்டில் மறைவாக தனிக்குழு ஒன்றை அமைக்கிறார்.
தந்தையின் ஆட்சியைக் கவிழ்த்த துரோகிகளின் கையிலிருக்கும் நாட்டைப் புரட்சி செய்து வெல்கிறார். இதுதான் கதையின் மையக்கருவாம்.
மிகப்பெரிய சுறா மீனுடன் ரஜினி சண்டையிடும் காட்சி, ஹாலிவுட்டின் அவதார் மற்றும் டின் டின்னிற்கு நிகராக படமாக்கப்பட்டுள்ளதாம்.

No comments:

Post a Comment

 

Sample text

Sample Text

Sample Text