அஜித்தின் ஆரம்பம் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கை குழு.
ரசிகர்களின் அமோக எதிர்பார்ப்புடன் ’தல’ அஜித், இயக்குனர் விஷ்ணுவர்த்தன் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் ஆரம்பம்.
ரசிகர்களின் அமோக எதிர்பார்ப்புடன் ’தல’ அஜித், இயக்குனர் விஷ்ணுவர்த்தன் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் ஆரம்பம்.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து ஆர்யா, நயன்தாரா, டாப்சி மற்றும் ராணா என நட்சத்திர பட்டாளமே கலக்கியுள்ளனர்.
கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடந்து வந்த இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிந்துவிட்டது.
இதனைத் தொடர்ந்து சென்சாருக்கு சென்ற ஆரம்பம் படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
இதற்கு முன்னர் வெளியான பில்லா, மங்காத்தா,அசல் போன்ற படங்களுக்கு யு சான்றிதழ் கிடைக்கவில்லை,
இப்படத்திற்கு இச்சான்றிதழ் கிடைத்துள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
No comments:
Post a Comment